● பெயர் வெளியிடாத அன்பர்.
நான் பத்தாம் வகுப்பு தான் படித்தேன். எனக்கு ஒரு கால் ஊனம். எட்டு வருடத்துக்கு முன்பு வேறு ஒரு இனப் பெண்ணைக் காதல் திருமணம் செய்தேன். இரண்டு பெண் குழந் தைகள் உண்டு. மனைவி படித்தவள்- நான் படிக் காதவன். எனக்கு வேலை இல்லை. மனைவி வேலைக்குப் போகிறாள். எனக்குத் தெரிந்த ஐந்து கல்லூரிகளில் வேலைக்கு சேர்த்துவிட்டேன். வேலை செய்யும் ஆண் களிடம் தவறாகப் பழகி சம்பாதிக்கவும், முன்னேறவும் திட்டம் போடுகிறாள். டாக்ட ரேட் பட்டம் வாங்கப் படிக்கிறாள். பட்டம் பெறமுடியுமா? அரசு வேலை அமையுமா? என்னை ஆதரிப் பாளா? அல்லது விரட்டி விடுவாளா? எனக்கு அவளைப் பிரிய மனமில்லை! என்ன தீர்வு?
உங்கள் மனைவி ஜாதகம் ஒழுக்கக் குறைவான ஜாதகம்தான். உங்கள் ஜாதகத்திலும் செவ்வாய், சந்திரன், சூரியன் மூன்று கிரகங்களும் நீசம்! மனைவி ஜாதகத்தில் சுக்கிரன் நீசம். தன்மானத் தைப் பெரிதாக நினைத் தால் மனைவி- மக்களை விட்டு வெளியேறி தனியாக எங்கேயாவது போய் பிழைப்பைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். எதுவும் உங்கள் முடிவுதான்! காசிராஜனே- மனைவி தவறு செய்ததைப் பொறுக்காமல் துறவு பூண்டு சாமியாராகியதாக வரலாறு உண்டு. இதை ஔவையாரே, "பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை அமையாவிட்டால் கூறாமல் சன்யாசம் கொள்' என்று சொல்லியிருக் கிறார்.
● கே. சுப்பிரமணியபிரபு, கள்ளிக்குடி.
கள்ளிக்குடியில் ஸ்டுடியோ வைத்து நடத்துகிறேன். தற்பொழுது மூன்று வருட காலமாக தொழில் சரியில்லை. வருமானம் குறைவு. நிகில் என்று ஒரு மகன் உண்டு. 3-ஆம் வகுப்பு படிக்கிறான். குடும் பத்தில் வாக்குவாதங்களும், கருத்து வேறு பாடுகளும் அடிக்கடி ஏற்படுகிறது. இவை எப்போது மாறும்?
மகன் நிகில் விருச்சிக ராசிக்கு 2020 வரை ஏழரைச்சனி நடக்கிறது. குடும்பக் குழப் பத்துக்கும், தந்தையின் தொழில் முடக் கத்துக்கும் அதுவே காரணம். நம்பிக்கையோடு காத்திருங்கள். நிகில்- பெற்றோர் அனைவருக்கும் ஆயுள் பலமுண்டு. எதிர்காலத்தில் நிகில் படிப்பு விருத்தியும் உண்டு. தொழில் மந்தம், வருமானப் பற்றாக்குறை இருக்கும். சனிக்கிழமைதோறும் 19 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி, நெய்யில் நனைத்து காலபைரவர் சந்நிதியில் தீபமேற்றி வழிபடவும். 2020 சனிப்பெயர்ச்சி முடியும்வரை! எள் தீபம் சனீஸ்வரருக்கு ஏற்றக் கூடாது. அதற்கு பதிலாக சனி பகவான் குருநாதர் பைரவருக்கு மிளகு தீபமேற்றலாம்.
● மகேஷ், கோவை-29.
கேள்வி: ........
மூன்று பக்கம் எழுதியிருக்கிறீர்கள். கூட்டெழுத்தில் எழுதியுள்ளதால் எதுவுமே புரியவில்லை. அடுத்த முறை தெளிவாக எழுதினால் பதில் கூறலாம். அல்லது டைப் அடித்தோ, கம்ப்யூட்டரில் பிரின்ட் அவுட் எடுத்தோ அனுப்பிவைக்கவும்.
● எம். சம்பத், கோவை-4.
எனக்கு 41 வயது. பல ஜோதிடர்கள், நியூமராலஜி, பரிகாரம் எல்லாம் செய்து பார்த்துவிட்டேன். எந்தப் பலனுமில்லை. ஒரு லட்சம் ரூபாய்வரை செலவுதான். கடன் பட்டதுதான் மிச்சம்! எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? மகான்களை வழிபட்டுவருகிறேன்.
அவ்வளவு பணம் எதற்காக செலவு செய்தீர்கள் என்பது புரியவில்லை. சரி; போகட்டும். சுந்தரம் குருக்கள் வசம் செல்: 99942 74067-ல் பேசி, கடைசிமுறையாக ஹோமம் செய்து, கலச அபிஷேகம் செய்யுங்கள். செலவு செய்ய வசதியில்லை என்றால், 18 சித்தர்கள் எங்கெங்கு அடங் கி யிருக்கிறார்களோ அங்கெல்லாம் போய் முறையிடுங்கள். நீங்கள்தான் மகான்களை வழிபடுகிறவராயிற்றே! அந்த மகான்கள் நிச்சயம் வழிகாட்டுவார்கள்.
● எஸ். சரசுவதி, விருத்தாசலம்.
என் மகளுக்கு எண்கணிதப்படி நல்ல பெயர் வைத்துத்தரவும்.
விசாக நட்சத்திரம், விருச்சிக ராசி, துலா லக்னம். 1-10-2011-ல் ஜனனம். தேதி எண் 1, கூட்டு எண் 6. அதனால்-
J. S. A A R U N I G A
1 3 1 1 2 6 5 1 3 1
என்பது 24 வரும். நல்ல பொருத்தம். (ஆருணிகா என்று தமிழில் எழுதலாம்.)
● சு. இளம்பருதி, கிருஷ்ணகிரி.
என் பிறந்த தேதி 13-9-1987, ஞாயிறு மாலை 4.12 மணி. எனக்கு ஒரு மகன்- கார்த்திக்ராம். பிறந்த தேதி 23-7-2013. (காலை 11.22 மணி). மத்திய அரசுப் பணியில் உள்ளேன். பணி உயர்வு கிடைத்தும், மனைவி பிறந்த ஊர் கிருஷ்ணகிரி என்பதால், சேலத்திலிருந்து கிருஷ்ணகிரிக்கு இடம் மாறி பணிபுரி கிறேன். எங்கள் ஜாதகப்படி பணி உயர்வு கிடைக்குமா? அடுத்த குழந்தை எப்போது கிட்டும்?
உங்கள் இருவர் ஜாதகத்தையும் மதுரை கே.எம். சுந்தரம் வசம் எழுதி, ஜெராக்ஸ் அனுப்பி வையுங்கள். அவர் செல்: 92453 28178. அப்பாஸ் காம்ப்ளக்ஸ் (மாடி), அம்பிகா காலேஜ் எதிரில், அண்ணாநகர் மெயின் ரோடு, மதுரை-20.
● வி. ஸ்ரீதர், சென்னை.
எனக்குச் சொந்தமான கடையில் திருமணத் தகவல் மையம் எப்போது நடத்தலாம்? என்னிடம் வரும் அனைவருக்கும் நல்ல வாழ்க்கை அமைய வேண்டும்.
இது நல்ல கேள்வி! இதை விட்டுவிட்டு வெளிநாட்டுப் பெண்ணை விரும்புகிறேன். திருமணம் எப்போது நடக்கும் என்றெல்லாம் அடிக்கடி எழுதுவீர்கள். நீங்கள் ஆரம்பிக்கும் திருமணத் தகவல் மையத்தில், வரும் பெண் ஜாதகங்களில் (விண்ணப்பங்களில்) உங்களுக்குப் பிடித்தமானவரைக்கூட திருமணம் பேசி முடிக்கலாம். உங்கள் திருமணத் தகவல் மையம் சிறப்பாக நடக்க கும்பகோணம்- குத்தாலம் அருகில் திருமணஞ் சேரி சென்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தகவல் மையத்துக்கு வைக்கும் பெயரையும் அர்ச்சனையில் சேர்த்துக் கொள்ளுங்கள். மாசி மகாசிவராத்திரிக்குப் பிறகு, வளர்பிறையில் கூட்டு எண் 6 வரும் தேதியில் ஆரம்பிக்கலாம்.